வட பகுதிக்கு அதிக வெளிநாட்டவர்கள் செல்கின்றனர்!- கோத்தபாய

இந்த வருட ஆகஸ்ட் மாதம் வரையில் இலங்கையின் வடபகுதிக்கு 31,500 வெளிநாட்டு கடவுச்சீட்டை கொண்டிருப்பவர்கள் பயணம் செய்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். 2011 ம் ஆண்டில் இருந்து 51.400 பேர் வடக்குக்கு பயணம் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுமார் 100 நாடுகளின் பயணிகள் இதில் அடங்குகின்றனர்.

இலங்கையில் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் இந்த வெளிநாட்டவர்களின் வருகை குறித்த செய்தியை பொய்யாக்கியுள்ளதாக கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் படையினர் குறைக்கப்பட்டுள்ளனர்.கிழக்கில் இருந்து 28 படைப்பிரிவுகள் தென்பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளன என்றும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webadmin