வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி கலாநிதி காந்தநேசன் ரதினி தலைமையில், இந்நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்றது.
அத்துடன் யாழ். தீவக மக்களின் சுகாதாரசேவையை மேம்படுத்துவதை இலக்காக கொண்டு 68 மில்லியன் ரூபாய் நிதியுதவியில், ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு மற்றும் நிர்வாக அலகுக்கான இரண்டு மாடி கட்டடத்தொகுதியையும் சுகாதார அமைச்சர் திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டதோடு, மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ராணுவ உயரதிகாரிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இவ் வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு இல்லாத காரணத்தால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். சுகாதார அமைச்சின் கவனத்திற்கும் இவ்விடயம் கொண்டுசெல்லப்பட்டது. இந்நிலையில், GFATM எனும் திட்ட உதவியின் கீழ் இந்த வெளிநோயாளர் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.