வட்டுக்கோட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு சிறுவன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
>தனது மகனுடன் உந்துருளியில் கோயிலுக்கு சென்றுக்கொண்டிருந்த வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
42 வயதுடைய சுப்பிரமணியம் தர்மணி என்ற பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த 7 வயதுடைய அவரது மகன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.