வடமாகாண விவசாய அமைச்சுக்குப் பேருந்துகள் அன்பளிப்பு

வடக்கு மாகாண விவசாய அமைச்சுக்கு ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் கனேடிய சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்தின் நிதியுதவியுடன் இரண்டு பேருந்துகளை அன்பளிப்புச் செய்துள்ளது.

01

இப்பேருந்துகளை முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட விவசாயத் திணைக்களங்களிடம் இன்று செவ்வாய்க்கிழமை (17.12.2013) வடக்கு மாகாண விவசாய,கமநல சேவைகள், கால்நடைஅபிருத்தி, நீர்ப்பாசனம், மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளார்.

02

திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற இக்கையளிப்பு வைபவத்தில் அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்துக்கான பேருந்தை அம்மாவட்டத்தின் பிரதி விவசாயப் பணிப்பாளர் த.யோகேஸ்வரனும், மன்னார் மாவட்டத்துக்கான பேருந்தை அம்மாவட்டத்தின் பிரதிப் பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரனும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இப் பேருந்துகள் விவசாய அறிவுசார் அபிவிருத்தி நடவடிக்கைகளில் பங்கேற்கும் விவசாயிகளினதும் விவசாயப் போதனாசிரியர்களினதும் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்களினதும் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படவுள்ளன என்று மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் தெரிவித்துள்ளார்.