வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று காலை யாழ்.பிரதான நூலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகியது.
வடக்கின் ஐந்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பிரதம விருந்தினராக புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சர் கரு ஜெயசூரிய, வடக்குமாகாண முதலமைச்சர், அமைச்சர்கள், வடக்குமாகாண ஆளுநர், வடமாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரச அதிபர்கள், திணைக்கள தலைவர்கள், திட்டமிடல் அதிகாரிகள், வடக்குமாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் வடமாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கு வாகனங்களையும் அமைச்சர் கரு ஜெயசூரிய கையளிக்கவுள்ளார்.