வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டும்: ஜனாதிபதிக்கு மகஜர்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, வவுனியா அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மகஜர் வழங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சருக்கு எதிராக வவுனியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) அணிதிரண்ட பொதுபலசேனா உள்ளிட்ட பௌத்த சிங்கள அமைப்புக்கள் ஒன்றிணைந்து குறித்த மகஜரை கையளித்துள்ளன.

மேலும் குறித்த மகஜரில், ‘எழுக தமிழ்’ பேரணிக்கு தலைமை தாங்கிய விக்னேஸ்வரன் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும், கலாபோபஸ்வௌ பிரதேசத்தை உள்ளடக்கிய தனிப்பிரதேச செயலக பிரிவு உருவாக்கப்பட வேண்டும், மீள்குடியேறிய சிங்கள மக்களுக்கு மத்திய அரசாங்கம் உதவி வழங்க வேண்டும், வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற முடியாது, விகாரைகளுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும், உள்ளூராட்சி சபை எல்லைகளை சரியாக மேற்கொண்டு தேர்தல் நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

நேற்றைய எதிர்ப்பு பேரணியில் சிங்கள ராவய, சிங்கள பெரமுன, பொதுபலசேனா, வடக்கை காத்து நாட்டை பாதுகாக்கும் தேசிய இயக்கம், கலாபோபஸ்வேவ மக்கள் உள்ளிட்ட பௌத்த சிங்கள அமைப்புக்கள் என்பன கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor