வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் 5 பேருக்கு நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இன்று காலை 10மணியளவில் வடமாகாண ஆளுனர் அலுவலகத்தில் வைத்து வடமாகாண ஆளுனர் ஜி.ஏ சந்திரசிறியால் இந்நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
பொது சேவை ஆணைக்குழுவின் தலைவர் உட்பட 5 உத்தியோகத்தர்களுக்கு இந்த நியமன கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேற்படி பொது சேவை ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்வர்களாக முன்னாள் கிழக்கு மாகாண பிரதம செயலாளரும் ,தற்போதைய பொது சேவை ஆணைக்குழுவின் தலைவருமான தியாகலிங்கம்,வடமாகாண பிரதி கல்வி அமைச்சின் செயலாளர் ப.விக்னேஸ்வரன்,பொதுசேவை ஆணைக்குழுவின் பணிப்பாளர் திசாநாயக்க,வடமாகாண தொழிற்துறை பிரதி ஆணையாளர் தியாகராஜா,பொது சேவை ஆணைக்குழுவின் அமைப்பாளர் அமுனு ஆகியோருக்கே இந்த நியமன கடிதம் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் இந்நிகழ்வில் யாழ் மாவட்ட அரச அதிபர்சுந்தரம் அருமைநாயகம் மற்றும் ஆளுனரின் செயலாளர் இளங்கோவன்,வடமாகாண அவைத் தலைவர் சிவஞானம,பிரதம செயலாளர் விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.