வடமாகாண தேர்தலை தொடர்ந்து அவதானிக்கிறோம்: இந்தியா

mahalingam-indiaநடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தொடர்ந்து அவதானித்து வருகின்றோம் என்று யாழ். இந்திய கவுன்சிலர் ஜெனரல் வே.மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை அவர் தெரிவித்தார்.

‘பல ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தல் நீதியான முறையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கின்றோம். இதில் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நடைபெற்றால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியது தேர்தல் திணைக்கள அதிகாரிகளே’ என்றும் அவர் தெரிவித்தார்.

‘இங்குள்ள நிலவரங்கள் தொடர்பில் கண்காணிப்பதற்கே நாங்கள் இங்கு இருக்கிறோம். அதுவே இங்குள்ள தூதரகத்தின் வேலை இந்த தேர்தல் தொடர்பிலும் நாங்கள் கண்காணித்து வருகின்றோம்’ என்று அவர் தெரிவித்தார்.

அத்துடன், ‘இந்தியா சென்றுள்ள இலங்கை வெளியுவுத்துறை அமைச்சர் ஜீ.எல்பீரிஸ், பொதுநலவாய நாடுகளின் மாநாடு தொடர்பில அழைப்பு விடுப்பதற்கு சென்றுள்ளார்.

அவர் தனது விஜயத்தின் போது இலங்கையில் அரசியல் தீர்வு மற்றும் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலும் இந்திய பிரதமருடன் கலந்துரையாடுவார்’ என்று அவர் தெரிவித்தார்.