வடமாகாண தேர்தலில் ஜனநாயக கட்சி போட்டியிடும் – பொன்சேகா!

sarath-fonsekaவடமாகாண சபைத்தேர்தலில் ஜனநாயக கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.

தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் மாற்றுக்குழுவுடன் இணைந்தே போட்டியிடவிருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான பாலித ரங்கே பண்டார தங்களுக்கு ஆதரவளிப்பார் என்று முன்னாள் இராணுவத்தளபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.