வடமாகாண தொழில்நுட்ப சங்கம் மாகாண சபை முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை பகல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொழிநுட்ப சங்கத்திலுள்ளவர்களே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த மாவட்டங்களில் தொழில்நுட்ப மையங்கள் உள்ளன. இதில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர தகைமைகளோடு பயிற்சி நெறியை முடித்த தங்களை தொழில்வாய்ப்புக்களுக்கு அனுமதிக்காமல் உயர்தரத் தகைமைகளோடு இப்பயிற்சி நெறியை நிறைவுசெய்தோருக்கு தொழில்வாய்ப்பு வழங்கப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இதன் காரணமாக இந்தப் பயிற்சி நெறியை நிறைவுசெய்த சுமார் 190 தொழில்வாய்ப்பு அற்ற நிலையில் பாதிக்கப்பட்டுள்ளதாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே தங்களுக்கு தொழில்வாய்ப்பு அளிக்குமாறும், நியமனங்களைப் பெற்றுக்கொடுக்குமாறும் வலியுறுத்தியே அவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.