ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கந்தசாமி கமலேந்திரன் வடமாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்டு மாகாணசபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கந்தசாமி கமலேந்திரன் எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நேற்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பொதுச் செயலாளரினால் ஆளுநருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஈ.பி.டி.பியினர் மேலும் தெரிவித்துள்ளனர்.