வடமாகாண சபைத் தேர்தலை செப்டெம்பர்- 7 இல் நடத்த அரசாங்கம் முடிவு?

vote-box1[1] (1)சர்வதேசத்தின் தொடர்ச்சியான அழுத்தங்களால் வட மாகாண சபைத் தேர்தலை செப்டெம்பர் 7 ம் திகதி நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாகவும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கவும் அதனைத் தொடர்ந்து, எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை இலக்கு வைத்துமே அரசு வட மாகாண சபைத் தேர்தல் திகதியை தீர்மானித்துள்ளது.

வடமாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், கனடா உட்படச் சர்வதேச நாடுகள் தொடர்ச்சியாக வலியுறுத்திவருவதால் அழுத்தங்களுக்கு முகம்கொடுக்க முடியாத நிலையில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேர்தலை நடத்துவதற்கான திகதியை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவிப்பு விடுக்கப்படவுள்ளதாகவும் நம்பகரமான தகவல்களின் மூலம் தெரியவருகிறது.

Recommended For You

About the Author: Editor