வடமாகாண சபைத்தேர்தல் 2012 வாக்காளர் பட்டியலின்படியே நடாத்தப்படும்!- தேர்தல்கள் ஆணையாளர்

Electionஎதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் தடவையாக நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தல், 2012ம் ஆண்டின் வாக்குப்பட்டியலின் படி நடாத்தப்படும் என்று தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

2012ம்ஆண்டின் இறுதி அரையாண்டில் மேற்கொள்ளப்பட்ட வாக்குப் பதிவுகளின் படி இந்த தேர்தல் நடாத்தப்படவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்னும் மூன்று மாதங்களில் இந்த தேர்தலை நடாத்துவதற்கான ஆரம்ப பணிகளை நிறைவு செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.