வடமாகாண காணி ஆவணங்களை அநுராதபுரத்துக்கு மாற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு; யாழ்.செயலகம் முன் ஆர்ப்பாட்டம்

வடக்கு மாகாண காணி ஆவணங்களை அநுராதபுரத்திலுள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகத்துக்கு மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணம் மாவட்ட செயலக வாயிலை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இன்று காலை ஆரம்பமானது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் மற்றும் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அநுராதபுரத்தில் உள்ள அலுவலகத்துக்கு வடக்கு மாகாண காணி ஆவணங்களை மாற்றுவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கே இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor