வடமாகாண கடற்றொழில் கூட்டமைப்பிற்கு புதிய தலைவர்

see-pracidentவடமாகாண கடற்றொழில் கூட்டமைப்பின் தலைவராக நல்லதம்பி விநாயகமூர்த்தி சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண கடற்றொழில் கூட்டமைப்பின் செயலாளர் கந்தப்புலம் சூரியகுமாரன் தெரிவித்தார்.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் வடமாகாண கடற்றொழில் கூட்டமைப்பும் இணைந்து வடமாகாண கூட்டமைப்பின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை ஊடகவியலாளர்கள் சந்திப்பை நடத்தியது. இதன்போதே அவர் இதனைக் கூறினார்.

வடமாகாண கடற்றொழில் கூட்டமைப்பின் தலைவராக இருந்த எஸ்.தவரெட்ணத்தின் மறைவைத் தொடர்ந்து அண்மையில் கடற்றொழில் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் தற்காலிகமாக தலைவர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது நல்லதம்பி விநாயகமூர்த்தி சுப்பிரமணியம் தெரிவு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும், வடமாகாண சபைத் தேர்தலின் பின்னர் 4 மாவட்ட உறுப்பினர்களுடனும் கலந்துரையாடி நிரந்தரமான தலைவரை நியமிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.