வடமாகாண எதிர்க்கட்சித் தலைவரின் மெய்ப்பாதுகாவலர் கைது

arrest_1வடமாகாண எதிர்க்கட்சித்தலைவரும் ஈழமக்கள் ஜனாநாயக் கட்சியின் அமைப்பாளருமான கமலேந்திரனின் மெய்ப்பாதுகாவலர் பயங்கரவாதக் குற்ற புலனாய்வுப் பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது மெய்பாதுகாவலளரான ஜோசப் பற்றிக் அமல்ராஜ் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரான்லி வீதியிலுள்ள உணவகம் ஒன்றில் 9 மில்லிமீற்றர் பிஸ்ரல் ரக துப்பாக்கியுடன் இவர் இருந்தபோதே கைது செய்ததாக பயங்கரவாதக் குற்ற புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.