வடமாகாண அமைச்சர்கள் மூவர் இன்று பதவியேற்றனர்

Kurukularajaவடமாகாண சபையின் மூன்று அமைச்சர்கள் இன்று காலை தமது கடமைகளை யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகங்களில் பொறுப்பேற்றனர்.

விவசாயமும், கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீரப்பாசனம், சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், புரூடி வீதியிலுள்ள அமைச்சின் அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

அதன் பின்னர் பத்தாயிரம் பனை மரக்கன்றுகள் நடும் திட்டத்தை புங்குடுதீவில் சம்பிரதாய பூர்வமாக அவர் ஆரம்பித்து வைத்தார்.

கல்வி, கலாசார அலுவல்கள், விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சர் த.குருகுலராஜா, செம்மணி வீதியிலுள்ள அமைச்சின் இன்று காலை 10.30 மணிக்கு அலுவலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

சுகாதார சேவை, சுதேச மருத்துவ அமைச்சர் ப.சத்தியலிங்கம்,பண்ணையில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஏற்றார்.

இதேவேளை, மீன்பிடி, போக்குவரத்து, கைத்தொழில், வர்த்தக வாணிப முயற்சி, கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தனது கடமைகளை எதிர்வரும் 25 ஆம் திகதியே பொறுப்பெடுப்பார் என்று தெரியவருகின்றது.