வடமராட்சி பிரதேசத்தின் அல்வாய் கிழக்கு, மாயக்கைப் பகுதியில் பற்றைக் காணிக்குள் இருந்து காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் பருத்தித்துறைப் பொலிஸாரால் நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டது.குறித்த சடலம் பருத்தித்துறை வி.எம்.றோட்டைச் சேர்ந்த குமாரசாமி கருணாநிதி (வயது 47) என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சடலம் பருத்தித்துறை அரசினர் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கருணாநிதியின் இறப்புக் குறித்த விசாரணையை பருத்தித்துறை இறப்பு விசாரணை அதிகாரி திருமதி அன்ரலா வின்சன்தயான் நடத்தியதுடன், உடற்கூற்றுப் பரிசோதனைக்கும் உத்தரவிட்டார்.
சடலத்தில் காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.