வடபகுதியில் உயர் கல்வியை மேம்படுத்த சிறந்த செயற்திட்டங்கள்!

வட பகுதியில் உயர் கல் வித்துறையை மென்மேலும் மேம்படுத்துவதற்கு தொடர்ந் தும் நடவடிக்கைகள் முன் னெடுக்கப்படுமென உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் இணை சுகாதார விஞ்ஞான கற்கைகள் பிரிவுக்கான புதிய கட்டடத்தை பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு நேற்றைய தினம் (28) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் பல்கலைக்கழகங்களுக்கூடாக உயர் கல்வியை வழங்குவதற்கும் கல்வித் துறையை மேம்படுத்துவதற்கும் மஹிந்த சிந்தனைக்கமைவாக செயற்திட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில் எதிர்காலத்திலும் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வுள்ளன.
கடந்த காலங்களை விடவும் தற்போது பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக பேராசிரியர்களையும் விரிவுரையாளர்களை யும் உள்வாங்கிய அதேவேளை- அதிகளவான மாணவர்களையும் உள்வாங்கியுள்ளோம்.
யுத்த காலத்தின் போது வடக்கு- கிழக்கில் மட்டுமல்லாது நாடளாவிய ரீதியிலும் உயர் கல்வியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இன்று இயல்பு நிலை தோன்றியுள்ள நிலையில் உயர் கல்வித் துறையை மேம்படுத்துவதிலும் ஜனாதிபதி அவர்களின் பணிப்புரை க்கமை வாக மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றோம் என்றும் தெரிவித்தார்.
அத்துடன் பல்கலைக்கழக சமூகத்தால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் உயர் கல்வி அமைச்சர் இதன் போது உறுதிமொழி வழங்கினார்.
குவைத் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் சுனாமி புனர்வாழ்வுக் கருத்திட்டத் திற்கமைய யாழ். பல்கலைக்கழக இணை சுகாதார கல்விப் பிரிவுக்காக 60 மில்லியன் ரூபா செலவில் 3 மாடிகளைக் கொண் டதாக நவீன வசதிகளுடன் இப்புதிய கட்டடம் அமையப் பெற்றுள்ளது.
மருத்துவ பீடத்தின் பின்புறமாகவுள்ள பல்கலைக்கழக மைதானத்திற்கு அண்மையாக அமையப்பெற்றுள்ள இக்கட்டடத் தொகுதியில் மருத்துவ ஆய்வு கூட விஞ்ஞானம்- தாதியியல் மற்றும் மருந்தாக்கவியல் ஆகியவற்றை ஒன்றிணைத்து இணை மருத்துவ விஞ்ஞான அலகு செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்பதாக பிரதான வாயிலிலிருந்து உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க- பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் உயர் கல்வி பிரதியமைச்சர் உள்ளிட்டோர் மங்கள வாத்தியம் சகிதம் இவ்விடத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
தொடக்க நிகழ்வுகளை அடுத்து புதிய கட்டடத்தை திறந்து வைத்ததுடன்- நினைவுக் கல்லையும் உயர் கல்வி அமைச்சர் திரைநீக்கம் செய்து வைத்தார்.
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி கலாநிதி பாலகுமார் தலைமையில் நடைபெற்ற அரங்க நிகழ்வில் துணைவேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணம்- உயர்கல்வி பிரதியமைச்சர் நந்தி மித்திர ஏக்கநாயக்க- பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
தன் போது சமயத் தலைவர்கள்- உயர் கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் நவரட்ண மற்றும் உயர் கல்வி அமைச்சினதும் யாழ். பல்கலைக்கழகத்தினதும் துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்