யாழ்ப்பாணம் மாவட்டம் உள்ளிட்ட வடமாகாணத்தின் பல பிரதேசங்களில் தொற்றியுள்ள இனங்காணப்படாத ஒரு வகை வைரஸ் காய்ச்சல் தொடர்பில் சுகாதார அமைச்சு பரிசோதனைகளை ஆரம்பித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜயசிங்கவின் பணிப்புறைக்கு அமைய குறித்த பரிசோதனை நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
தற்போதைய நிலையில் இந்த பரிசோதனையின் பொருட்டு வைத்தியர்கள் அடங்கிய குழு ஒன்று வடமாகாணத்திற்கு சென்றுள்ளது.
வடமாகாணத்தின் சுகாதார பிரிவின் தகவலுக்கு அமைய கடந்த 3 மாத காலப்பகுதியில் இந்த வைரஸ் காய்ச்சல் காரணமாக 20பேர் வரையில் பலியாகினர்.
நேற்றைய தினம் 8 வயது சிறுவன் ஒருவன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைத்து குறித்த வைரஸ் காய்ச்சல் காரணமாக பலியானார்.
எவ்வாறாயினும், இது தொற்று நோயாக பரவி செல்லும் நோய் இல்லை எனவும் அந்த நோய் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.