வடக்கு விவசாய அமைச்சின் செயலர் மாரடைப்பால் மரணம்

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் உதுமா லெப்பை முகமது ஹால்தீன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய ஹால்தீன் நேற்று முன்தினம் இரவு மாரடைப்பினால் குருநாகலில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்துள்ளார்.

vevasaya-sect-

இலங்கை நிர்வாக சேவை விசேட தரம் வகுப்பு 1 ஐச் சேர்ந்த இவர் முன்னர் மீள்குடியேற்றம் மற்றும் இடர் நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளராக கடமையாற்றியிருந்தார்.

அதன்போது இறுதிக் கட்ட யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி முகாம்களில் இருந்த மக்களின் அவலங்களை நேரில் கண்ட ஒருவர்.

அத்துடன் அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற பல்வேறு திட்டங்களை முன்னெடுத்ததுடன் தன்னால் இயன்றவரை அவற்றை சிறப்பாகவும் செய்து முடித்தவர்.

அதனைத்தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு முதல் வடக்கு மாகாண விவசாய , கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.