வடக்கு ரயில் பாதை புனரமைப்பு அடுத்த வருடத்துடன் நிறைவு!– யாழ். இந்தியத் துணைத் தூதுவர்

mahalingam_indiaவடபகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரயில் பாதை புனரமைப்புப் பணியில் கிளிநொச்சி வரைக்குமான புனரமைப்பு எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்துடன் முழுமையாக நிறைவடையுமென யாழ். இந்தியத் துணைத் தூதுவர் எஸ்.மகாலிங்கம் தெரிவித்துள்ளார்

காங்கேசன்துறை வரையான புனரமைப்புப் பணிகள் எதிர்வரும் 2014ம் ஆண்டின் இறுதிப் பகுதியிலேயே நிறைவடையுமெனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த மூன்று தசாப்தகால யுத்தம் காரணமாக வட பகுதிக்கான ரயில் பாதைகள் முற்று முழுதாக சேதமடைந்திருந்தன.

இந்த நிலையில் இந்திய அரசின் நிதியுதவித் திட்டத்தின் கீழ், இந்தியாவின் ஐகோன் நிறுவனம் வடபகுதிக்கான ரயில் பாதை புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

ஓமந்தையிலிருந்து காங்கேசன்துறை வரையான 152 கி.மீற்றர் கொண்ட ரயில் பாதை புனரமைப்பிற்காக 430 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புனரமைப்புப் பணிகள் கடந்த 2014ம் ஆண்டு இறுதிப் பகுதியில் நிறைவடையுமென யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் எஸ்.மகாலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்

Recommended For You

About the Author: Editor