வடக்கு மீனவர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்: செல்வம் அடைக்கலநாதன்

வடக்கு மீனவர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.கடலுக்கு செல்லும் அதே இடத்திலேயே மீள் திரும்ப வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் கடினமானதாகும்.

வேறு இடத்தின் ஊடாக தரைக்குச் சென்றால் மீனவர்களின் மீன்பிடி அனுமதி ரத்து செய்யப்படும் என கடற்படையினர் அறிவித்துள்ளனர். இந்த நடைமுறை மிகவும் சிக்கல் மிகுந்ததாகும்.

இது தொடர்பில் நீதிமன்றின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts