வடக்கு மாகாணத்தில் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பரீட்சைப் பெறுபேறுகள் தற்பொழுது வெளியாகியுள்ளன.
வடக்கு மாகாணத்தின் பொதுச்சேவை ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட இந்தப் பரீட்சையில் வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் மட்டும் பரீட்சைகளுக்காக உள்ளீர்க்கப்பட்டிருந்தனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு அவர்களுக்கான நியமனக் கடிதங்களை மிக விரைவில் வழக்கப்படவுள்ளதாக மாகாணத்தின் பிரதானி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி இந்த பரீட்சைப் பெறுபேறுகளை http://www.np.gov.lk/ என்ற இந்த இணையதள முகவரியினூடாகச் சென்று பார்வையிட முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.