வடக்கு மாகாண நிகழ்வில் சிங்களத்தில் தேசிய கீதம்

வடக்கு மாகாணத்தின் ஆளுநர் கிண்ணத்துக்காக நேற்று இடம்பெற்ற இறுதிப் போட்டியின் போது சிங்கள மொழியில் தேசிய கீதம் ஒலிக்க விடப்பட்டது.வடக்குமாகாண அமைச்சுகளுக்கிடையிலான ஆளுநர் கிண்ணப் போட்டிகளின் இறுதி ஆட்டங்கள் நல்லூர் ஸ்தான பாடசாலையில் நேற்று இடம்பெற்றன.

நேற்றைய ஆட்டங்கள் பி.ப. 2 மணிக்கு ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால், வடமாகாண சபையின் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் குறித்த நேரத்துக்கே மைதானத்துக்குச் சென்றிருந்தனர்.

இருப்பினும் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி பி.ப. 3.10 மணியளவிலேயே வருகை தந்தார். வடக்கு மாகாணத்தின் நிகழ்வு ஒன்றில் இவ்வாறு சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமை ஆளுநரின் சர்வாதிகாரத்தனத் தைக் காட்டுவதாகப் பலரும் விசனம் தெரிவித்தனர்.