வடக்கு மாகாண சபையின் கோரிக்கை

தாயகத்தில் இருக்கக் கூடிய உற்பத்தி சார் வளங்களை இனங்கண்டு அவற்றைக் கொண்டு உருவாக்கக் கூடிய தொழில்களையும் இனம் கண்டு திட்டங்களை தயாரித்து எமக்கு வழங்கி உதவ வேண்டும் என்று துறைசார் அறிவு, ஆற்றல், அனுபவம் மற்றும் நிபுணத்துவம் கொண்டவர்களை வடக்கு மாகாண சபை வேண்டி நிற்கின்றது என அவைத்தலைவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளார். அதன்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த முப்பது வருட கால யுத்த நிலை மற்றும் இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட புறக்கணிப்புக்கள், பாகுபாடுகள் காரணமாக தமது வாழ்வாதாரங்களை இழந்தும் , தொலைத்து விட்டும் நிரந்தர தொழில் வருமானம் எதுவுமின்றியும் அல்லற்படும் எமது மக்களின் வாழ்வியலையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதுமிக அவசியமாகும்.

அறிக்கையின் முழு விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது…

vadamaakamam-notes