வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு புதிய வாகனங்கள் இன்று கையளிப்பு

north-provincial-vadakku-npcவடக்கு மாகாண அமைச்சர்கள்,அவைத்தலைவருக்கான வாகனம் மற்றும் சுகாதார அமைச்சிற்குமான வாகனங்கள் இன்று கையளிக்கப்பட்டது.

அரசினால் வரிவிலக்கழிக்கப்பட்டு மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் வாகனங்கள் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம், அமைச்சர்களான ஐங்கரநேசன், குருகுலராசா மற்றும் டெனீஸ்வரன் மற்றும் சுகாதார அமைச்சிற்குமாக 5வாகனங்கள் இன்று கையளிக்கப்பட்டன.

மேலும் முதலமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோருக்கான வாகனங்கள் ரொயாட்டாகம்பனியிலிருந்து கொண்டு வரப்படவுள்ளதால் அவை சற்று தாமதமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

2014 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபை உறுப்பினர்களின் வாகன கொள்வனவுக்கு என வரவு செலவுத்திட்டத்தில் தலா 58 இலட்சம் ஒதுக்கப்பட்டது. அந்த நிதியில் இருந்தே குறித்த வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

இதன்படி எதிர்வரும் 15ஆம் திகதி இடம்பெறவுள்ள மாகாண சபை அமர்வுக்கு அமைச்சர்கள் மற்றும் அவைத்தலைவர் ஆகியோர் புதிய வாகனங்களிலேயே பயணிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் வடமாகாண அமைச்சர்கள் வராதமையால் அதனை அமைச்சர்களின் செயலாளர்களிடம் வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏசந்திரசிறி கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

car_2

car_3

car_4

car_5

Recommended For You

About the Author: Editor