வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இலங்கைக்கு ஹிலாரி அழுத்தம்

வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை உடனடியாக நடத்துமாறு அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன், இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்திக் கூறியுள்ளார். கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.கடந்தமாதம் வொசிங்டனில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை சந்தித்துப் பேசியபோது, வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை உடனடியாக நடத்த வேண்டியதன் அவசியத்தை ஹிலாரி கிளின்ரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தில் அமெரிக்கா தீவிரமான அக்கறை கொண்டுள்ளதாகவும் அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webadmin