வடக்கு, மத்திய மாகாண சபைகளில் ஈரோஸ் தனித்துப் போட்டி

election-meeting-candidateவிரைவில் நடைபெறவுள்ள வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கான தேர்தல்களில் ஈரோஸ் என்று அழைக்கப்படும் ஈழவர் ஜனநாயக முன்னணி தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பினை அக்கட்சியின் பொதுச் செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன் மேற்கொண்டுள்ளார். இதற்கான வேட்பாளர் தெரிவுகள் நிறைவடைந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.