வடக்கு மக்கள் புத்தியை பாவித்து நடந்துகொள்ளும் காலம் வந்துள்ளதாம்; பசில் ராஜபக்ச

pasil-rajapaksaவடக்கு மக்கள் தமது புத்தியை பாவித்து நடந்துகொள்ளும் காலம் வந்துள்ளதாக பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டால், பல்வேறு அரசியல் கட்சிகள் மக்களை சந்தித்து, வாக்குகளை பெறுவதற்காக பல்வேறு பொய்யான உறுதிமொழிகளை வழங்குவர்.

இதன் காரணமாக வடக்கு மக்கள் புத்தியுடன் நடந்து கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தலைமன்னார் தொடரூந்து பாதையை மதவாச்சியில் இருந்து மடு வரையும் ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.