வடக்கு மக்கள் காவல்துறையினருடன் இணைந்து செயற்படவேண்டுமென காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்த தெரிவித்துள்ளார். ஒட்டுசுட்டானில் காவல்துறை நிலையம் ஒன்றைத் திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், காவல்துறையினருக்கும் தமிழ் மக்களுக்குமிடையில் ஐக்கியமேற்படுத்தப்படுவது அவசியமானது எனவும் தெரிவித்த அவர், இந்தப் புதிய காவல்துறை நிலையத்தை மக்கள் பேணிப் பாதுகாப்பார்கள் எனவும் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.