வடக்கு மக்களுக்கு மனித உரிமைகள் தொடர்பாக விசேட செயலமர்வுகள்!

Human_rightsவடக்கு மக்களுக்கு மனித உரிமைகள் தொடர்பாக விசேட செயலமர்வுகள் இம்மாதம் 19,21,22 ம் திகதிகளில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு பகுதிகளில் நடாத்தப்படவுள்ளதாக யாழ்..மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பதிகாரி ரி. கனகராஜ் இன்று தெரிவித்துள்ளார்.

மார்ச் 19 ம் திகதி கிளிநொச்சிப் பகுதியில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் ஆனந்தராஜா தலைமையில் நடைபெறவுள்ளது.இதில் சமகால மதித உரிமைகள், சிவில் சமூக உபகுழுக்களின் மனித உரிமை செயற்பாடு, அரச மற்றும் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள மனித உரிமைப் பிரச்சினைகள் பற்றி ஆராயப்படவுள்ளது.

இதேவேளை மார்ச் 22ம் திகதி யாழ்பாணத்தில் மனித உரிமை மேம்பாடுகள் தொடர்பாகவும் பொதுமக்களின் உரிமைகள் சிறுவர் பெண்கள் உரிமைகள் தொடர்பாக விளிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.

அத்தோடு கிளிநொச்சி கல்வி கலயத்திற்குட்பட்ட 107 பாடசாலைகளில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சமகால மனித உரிமைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்படவுள்ளதாக யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பதிகாரி ரி. கனகராஜ் மேலும் தெரிவித்துள்ளார்