யுத்தத்தால் மோசமாகப் பாதிப்படைந்த வடக்கு மக்களின் காணிகள், சொத்துக்கள் தொடர்பான பிரச்சனையைத் தீர்ப்பதற்கு விசேட இணக்கசபையை உருவாக்கும் பணியில் நிதியமைச்சு ஈடுபட்டுள்ளது.
நிதியமைச்சின் இணக்கசபை ஆணைக்குழுவினால் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ள தாக அரசாங்க தகவல் திணைக்கள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இணக்கசபை மூலம் யுத்தகாலத்தில் தமது காணிகள் மற்றும் சொத்துக்களை இழந்தவர்களை அடையாளங் காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகின்றது.
அத்துடன் காணிகள் மற்றும் ஏனைய சொத்துக்களை அதன் உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கான விசேட சட்டமூலம் ஒன்றும் அண்மையில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.