வடக்கு பிரதம செயலாளராக பதவியேற்கிறார் சமன் பந்துலசேன!

வடமாகாண பிரதம செயலாளராக பதவியேற்பதை முன்னிட்டு சமன் பந்துலசேன வவுனியா ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தில் விசேட பூசை வழிபாட்டில் இன்று (26) காலை ஈடுபட்டார்.

வவுனியா மாவட்டத்தின் அரச அதிபர் எஸ்.எம்.சமன்பந்துலசேன வடக்கின் பிரதம செயலாளராக ஜனாதிபதியால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டார்.

வடமாகாண ஆளுனரின் சிபாரிசின் பின்னணியில் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சுள்ளது. வடக்கில் சிங்கள மொழி பேசுபவர் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டமைக்கு பரவலான எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது.

வடமாகாண பிரதம செயலாளராக சமன் பந்துலசேன யாழ்ப்பாணத்தில் இன்று பதவியேற்கவுள்ள நிலையில் வவுனியா ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தில் காலை விசேட பூசை வழிபாட்டில் ஈடுபட்டார்.

இவ் வழிபாட்டு நிகழ்வில் அவரின் குடும்பத்தினர் மற்றும் வவுனியாவை சேர்ந்த சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor