வடக்கு தேர்தலில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்; பஃவ்ரல் அமைப்பு

paffrel-electionவட மாகாண சபைத் தேர்தல் கண்காணிப்பில் 5000 கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பஃவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹான் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து தங்களுடைய குழு கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும்.அத்துடன், வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் 10 பேரை வரவழைக்கவிருப்பதாகவும்

அவர்கள் அனைவரும் வடமாகாணத்திலேயே கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என அவர் சுட்டிகாட்டியதுடன்,

வடமாகாண சபையுடன் இணைந்து நடாத்தப்படும் மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் பாரிய பிரச்சினைகளை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.