வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீதிற்கும் இடையிலான சினேகபூர்வ சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது கிழக்கு மாகாணத்துடன் கருத்தொற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் ஒன்றாக செயற்படுவதற்கான தமது விருப்பத்தை கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்று திருகோணமலையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.