வடமாகாணத்தில் கிராம அலுவலர் பிரிவு தோறும் இளைஞர் கழகம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் ஊடாக வாலிபர் நாடாளுமன்றத்தை வழிப்படுத்த அரச நிர்வாக மாகாண சபைகள் துரித நடவடிக்கையை விரைவில் எடுக்கும். இவ்வாறு அரச நிர்வாக மாகாண சபைகள் அமைச்சு செயலாளர் ஜே.தடல்லகே வடக்கு பிரதம செயலாளர்களின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
மாகாண மட்டத்தினுள் இளைஞர் கழகத்தை புனரமைப்பு செய்வதற்கும் வாலிபர் நாடாளுமன்றத்தை மாற்றியமைத்து வலுப்படுத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட நடவடிக்கை எடுத்துள்ளார்.
எனவே வடமாகாணத்தில் உள்ள அரச அதிகாரிகள் இந்தச் செயற்றிட்டத்தை முனைப்புடன் நடத்த ஒருங்கிணைந்த ஒருங்கிசைவு தேவை என மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.