வடக்கு கடற்படை உயரதிகாரிக்கு எதிராக நாகதீப விஹாரையின் நவதகல பதுமதிஸ்ஸ தேரர் முறைப்பாடு

SL Navy logoவடக்கில் கடமையாற்றிவரும் உயர் கடற்படை அதிகாரி ஒருவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.மதகுருமார், அரசாங்க உத்தியோகத்தர்கள், தீவக மக்களுக்கு இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்படும் வகையில் செயற்பட்டு வருவதாக குறித்த அதிகாரி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த கடற்படை அதிகாரியின் நடவடிக்கைகள் தொடர்பில் நாகதீப விஹாரையின் நவதகல பதுமதிஸ்ஸ தேரர், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்சவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த கடற்படை அதிகாரியின் நடவடிக்கையினால் எதிர்காலத் தேர்தல்களின் போது தீவக மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படக் கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் கடற்படை உயரதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புச் செயலாளரிடம் கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணை நடாத்துமாறு கடற்படைத் தளபதிக்கு பாதுகாப்பு அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor