வடக்கு ஆளுநருடன் இந்திய எம்.பிக்கள் சந்தித்துப்பேச்சு

alunar-indiaயாழ். மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறியைச் சந்தித்து வடமாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

ஆளுநர் செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற இந்த சந்திப்பில் இந்திய பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவிசங்கர் பிரசாத் மற்றும் சுரெஸ் பாபு ஆகியோரும் இவர்களுடன், இந்திய வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் விவேக் கயுதீப் மற்றும் இந்திய பவுண்டேசன் நிறுவனத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இந்திய குழுவினருக்கு ஆளுநர் விளக்களித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் வடக்கு மாகாண ஆளுனரின் செயலாளர் இளங்கோவன்,அமைச்சுக்களின் செயலாளர்கள், வடமாண அமைச்சுக்களின் கீழ் உள்ள திணைக்களங்களின் பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.