வடக்கு,கிழக்கில் கடும் காற்றுடனான மழை பெய்யக் கூடும்

kattuவடக்கு- கிழக்கு கடற்பிரதேசங்களில் கொந்தளிப்புடனான காற்று வீசக் கூடும் என வளிமண்டளவில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

திருகோணமலைக்கு அப்பால் 250 கிலோமீற்றர் தூரத்தில் நிலைக் கொண்டுள்ள தாழமுக்கம் வலுப்பெற்று வருவதனாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மன்னார் முதல் பொத்துவில், யாழ்ப்பாணம் மற்றும் மட்டகளப்பு பிரதேசங்களில் இடியுடனான கடும் மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வடபகுதியிலிருந்து கிழக்கு நோக்கி வீசும் காற்று மணிக்கு முப்பது முதல் ஐம்பது கிலோமீற்றர் வரை அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி, மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையிலும், கரையோர கடற்பிராந்தியத்தில் இந்த நிலை நீடிக்கும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.