வடக்கில் 252 கி.மீ. நீளமான ரயில் பாதையை இந்தியா புனரமைக்க நடவடிக்கை

இலங்கையின் வட பகுதியில் மதவாச்சி – யாழ்ப்பாணம், காங்கேசன்துறை இடையே 252.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மிக நீளமான ரயில் பாதை போரினால் அழிவடைந்து விட்டது.இப்போது தமிழர் பகுதிகளில் புனரமைப்பு பணிகள் இந்திய நிதியுதவியுடன் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், 252 கி.மீ. நீள ரயில் பாதையை மீண்டும் புனரமைக்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த புனரமைப்பு திட்டத்துக்காக இந்தியா 800 மில்லியன் டொலர் (சுமார் ரூ.4 ஆயிரம் கோடி) செலவு செய்கிறது. ஏற்கனவே செய்துகொண்ட உடன்படிக்கையின் படி கடனாக இந்த தொகை வழங்கப்படுகிறது.

இந்திய அரசு நிறுவனமான “இர்கான்” இந்த ரயில் பாதையை புனரமைக்கும் பணியில் ஈடுபட உள்ளது. அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த பணிகள் முடிவடையும் என தகவல்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக இலங்கையில் “இர்கான்” செயல்பாடுகளை கவனிக்கிற பொறுப்பாளர் எஸ்.எல்.குப்தா குறிப்பிடுகையில், “252 நீள ரயில் பாதை திட்டம், 4 கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது.

முதல் கட்டமாக மதவாச்சி – மதுசாலை வரையிலான பணிகள் அடுத்த ஆண்டு பெப்ரவரியில் முடியும். அதைத்தொடர்ந்து மதுசாலை- தலைமன்னார் பணிகள், ஓமந்தை – பால்லாய் பணிகள் அடுத்த செப்டம்பரில் நிறைவு அடையும். இறுதிக்கட்டமாக பால்லாய் – காங்கேசன்துறை பணிகள் அடுத்த டிசம்பரில் முடியும் என்றார்.

Recommended For You

About the Author: webadmin