வவுனியா மற்றும் ஊர்காவற்துறை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (18) இடம்பெற்ற இருவேறு சம்பவங்களில் பெண்கள் இருவர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, செட்டிக்குளம் வீதியில், சாம்பல்தோட்டத்துக்கு திரும்பும் சந்தியில் சனிக்கிழமை பிற்பகல் 1.30க்கு இடம்பெற்ற விபத்தில், நெலுங்குளம் அரசாங்க வீட்டுத்தொகுதியை வசிப்பிடமாகக் கொண்டிருந்த சுதாநாதன் வனஜா( வயது 34) மரணமடைந்துள்ளார்.
அந்த சந்தியில் வவுனியா பக்கமாக பயணித்துகொண்டிருந்த கெப்ரக வாகனமொன்று, முன்பாக பயணித்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளது. மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்று கொண்டிருந்த குறித்த பெண், கீழேவிழுந்து படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய, கெப் ரக வாகனத்தின் சாரதியை கைதுசெய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவில், கலபும் காரைநகர் என்ற விலாசத்தை வசிக்கும் 29 வயதான கனேஷபுள்ளை மாலினி என்ற பெண், தன்வீட்டில் உள்ள கிணற்றில் விழுந்துள்ளதாக சனிக்கிழமை 3.20க்கு கிடைத்த தகவலையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார், அப்பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர்.