வடக்கில் தொடரும் வாள்வெட்டு: கற்பகபுரத்தில் நால்வர் படுகாயம்

வவுனியா – கற்பகபுரம் பகுதியில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது வாள்வெட்டுக்கு இலக்காகி நான்கு பேர் காயமடைந்து, வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (வியாழக்கிழமை) மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம், இறுதியில் வாள்வெட்டில் முடிந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

படுகாயங்களுக்கு உள்ளான நால்வரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வாள்வெட்டு தாக்குதலை நடத்தியவர்கள் தப்பியோடியுள்ள நிலையில், பொலிஸார் அவர்களை தேடி வலைவிரித்துள்ளனர்.

வடக்கு பகுதியில் வாள்வெட்டு கலாசாரம் மிகவும் வேகமாக பரவி வருவதோடு, சிறு வாய்த்தர்க்கங்களும் இறுதியில் வாள்வெட்டில் முடிவடைவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கடந்த தீபாவளி தினத்தில் மாத்திரம் வடக்கின் பல்வேறு பகுதிகளில் இவ்வாறு பல வாள்வெட்டு சம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts