Ad Widget

வடக்கில் தேர்தல் நடத்தி, வடக்கின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவோம்: கோத்தபாய

வடக்கில் தேர்தல் நடத்தி அதன் மூலம் அந்தப் பிரதேசத்தின் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.தேர்தலை நடாத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகின்றது.எதிர்வரும் செப்டம்பர் மாதம் கிழக்கில் தேர்தல் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் விரைவில் வடக்கில் தேர்தல் நடத்தப்படும். பிரதேச மக்களின் பொருளாதாரத்தை மற்றுமன்றி அவர்களின் உளநிலையையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

போர் நிறைவின் பின்னர் இடம்பெயர் மக்களுக்காக பாரியளவில் அரசாங்கம் சேவையாற்றியுள்ளது என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts