தேர்தல் கண்காணிப்புக்கு மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

mahinda-deshpriyaவடக்கு தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இந்த அழைப்பை விடுத்துள்ளார். ஆசிய தேர்தல் கண்காணிப்பு குழு, தேர்தல் முகாமைத்துவம் குறித்த தெற்காசிய கூட்டமைப்பு மற்றும் பொதுநலவாய நாடுகள் கண்காணிப்பு அமைப்பு ஆகியவற்றுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழைப்பு விடுக்குமாறு சில கட்சிகள் கோரியிருந்தன.

எனினும் தேசிய ரீதியான தேர்தல்களை தவிர்ந்த ஏனைய தேர்தல்களில் ஐரோப்பிய ஒன்றியம் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளாது என அறிவிக்கப்பட்டுள்ளது.