Ad Widget

வடக்கில் இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க நோர்வே அரசு தயார்

வடக்கில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வாய்ப்பு முயற்சியினை எற்படுத்த நோர்வே அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் இலங்கையின் பல்வேறு துறைகளில் அபிவிருத்திகளை ஆராய்ந்துவரும் இத்தருணத்தில் வடக்கில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் ஏன் முன்வரவில்லை. அதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்ப் ஜோர்ன் கோஸ்ரட்சீதர் தெரிவித்தாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்ப் ஜோர்ன் கோஸ்ரட்சீதர் மூவர் அடங்கிய குழுவினர்கள் நேற்று யாழ். மாவட்டத்திற்கு வருகை தந்து யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அரச அதிபர்…

இனங்களுக்கிடையில் நல்லிணக்கம்,சமத்தவம்,ஆன்மீகம் போன்ற பல செயற்பாடுகளை கொண்டுள்ள நோர்வே நாடு அதனை தன்னிறை கொண்டுள்ள மாற்றங்களை இலங்கை நாடு பெற்றுக்கொள்ள கூடிய வகையில் அவர்களுக்கான புதிய நடமுறைகளை முன்னெடுக்க எப்போதும் இலங்கை அரசாங்கத்துடன் உறுதுணையாக இருப்போம் என இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்ப் ஜோர்ன் கோஸ்ரட்சீதர் தெரிவித்தாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

இதில் யாழ்.குடாநாட்டின் இளைஞர்கள், யுவதிகளின் தொழில்வாய்ப்புகள், மற்றும் தற்போது யாழ். குடாநாட்டு மக்களின் நிலைமைகள், அவர்களுக்கான தேவைகள், மீள்குடியேற்றத்தின் நிலைமைகள், கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பத்தின் மாணவர்களின் தொடர்பாடல்கள், போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

Related Posts