வடக்கில் இரு அமைச்சுக்களுக்கான வரவு – செலவு ஏகமனதாக நிறைவேற்றம்

north-shabaaவடமாகாண சபையில் கல்வி,கலை,பண்பாட்டு மற்றும் சுகாதார, சுதேச வைத்தியத்துறை ஆகிய அமைச்சுக்கான வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

நேற்று காலை 9.30 அளவில் ஆரம்பமான சபை அமர்வில், காலையில் கல்வி,கலை,பண்பாட்டு அமைச்சுக்கான விவாதங்கள் இடம்பெற்றன.

இந்த அமைச்சுக்காக 6 இலட்சத்து 424 ஆயிரத்து 236 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது.

நண்பகலின் பின்னர் சுகாதார, சுதேச வைத்தியத்துறைக்கான விவாதம் இடம்பெற்றது. இந்த அமைச்சுக்கு 3இலட்சத்து 532 ஆயிரத்து 957 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது.

மீன்பிடி,போக்குவரத்து, வர்த்தகம்,வாணிபம் மற்றும் விவசாய கமநல சேவைகள், கால்நடை, நீர்பாசனம் ஆகிய இரண்டு அமைச்சுக்களுக்கான விவாதங்களும் நேற்றய தினம் இடம்பெறவிருந்தபோதிலும் நேரம் போதாமை காரணமாக இன்றைய தினத்திற்கு விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Posts