வடக்கிலிருந்து படையினரை விலக்கிக் கொள்ளுமாறு கோரவில்லை! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஓர் பயங்கரவாத இயக்கம்: பாராளுமன்றில் சம்பந்தன்

வடக்கிலிருந்து படையினரை விலக்கிக் கொள்ளுமாறு தாம் கோரவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஓர் பயங்கரவாத இயக்கம், அந்த இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கைளினால் அழிவைத் தேடிக்கொண்டது.மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபோதும் கவனத்திற் கொள்ளவில்லை.

இந்தக் காரணத்தினால் புலிகள் அழிவடைந்தனர். எனினும், தமிழ் மக்கள் குறித்த பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர்.போர் இடம்பெற்ற பகுதிகளில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுத் திட்டங்களை முன்வைக்க வேண்டும் என சம்பந்தன் கோரியுள்ளார்.வரவு செலவுத் திட்டம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webadmin