வடக்கிற்கு 800 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு: மனோ கணேசன்

வடக்கு – கிழக்கின் அபிவிருத்திக்கு 800 பில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி, தென்மேற்கு பிரதேச சபையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த வருட இறுதியில் அமைச்சரவை மாற்றத்தின்போது ஜனாதிபதியின் பொறுப்பிலிருந்த சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சு எனக்கு ஒதுக்கப்பட்டது.

அதனடிப்படையில் குறித்த அமைச்சினூடாக 800 மில்லியன் ரூபாவினை நான் வடக்கு கிழக்கிற்கு ஒதுக்கியிருந்தேன்.அதனடிப்படையில் குறித்த மாகாணங்களின் 8 மாவட்டங்களுக்கும் குறித்த நிதி பகிரப்பட்டது.

ஆனால் துரதிஸ்டவசமாக குறித்த நிதியில் ஒருபகுதி நாட்டில் இடம்பெற்ற அரசியல் குழப்ப நிலையால் திறைசேரிக்குத் திரும்பிச் சென்றுவிட்டது.

ஆனாலும் ஒதுக்கப்பட்ட அந்த நிதியினை மீண்டும் கிடைப்பதற்கு அமைச்சர் என்ற வகையில் நான் முயற்சி செய்வேன்.

அதேவேளை குறித்த நிதியினை மிகக்குறுகிய காலத்தில் ஒதுக்கியதுடன், அது விரைவாக மக்களைச் சென்றடைவதற்கு நானும் எனது அமைச்சின் அதிகாரிகளும் அந்தந்த மாவட்ட அதிகாரிகளும் கடுமையாக உழைத்திருந்தோம்.

எனவே வடக்கு – கிழக்கின் அபிவிருத்திக்கு எமது அமைச்சினது சேவை மேலும் தொடரும் என்பதை நான் உறுதியுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்” என அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor