Ad Widget

வடக்கிற்கு 50 புதிய பஸ் தரிப்பிடங்கள்

வடமாகாணத்திலுள்ள பின்தங்கிய கிராமங்களில் 50 பஸ் தரிப்பிடங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண போக்குவரத்து மீன்பிடி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் டெனீஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

வடமாகாணத்திலுள்ள பின்தங்கிய கிராமங்களில் பஸ் தரிப்பிடங்கள் இல்லாமையால், மாணவர்களும், முதியவர்கள் போக்குவரத்தை மேற்கொள்வதில் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

இதனை நிவர்த்தி செய்யும் நோக்குடன் இந்த பஸ் தரிப்பிடங்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்த மாதம் 15 ஆம் திகதிக்கு பின்னர் இதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடைபெறவுள்ளதுடன், ஒரு தரிப்பிடத்திற்கு 3 இலட்சம் ரூபாய் தொடக்கம் 5 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கிராமத்திலுள்ள பிரதான இடங்களில் இந்த பஸ் தரிப்பிடங்களை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts